Monday 21 May 2012

மயிலாடுதுறை வட்டார ஜமாஅத் கூட்டமைப்பின் விளக்க கடிதம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

மதிப்பிற்குரிய முஸ்லீம் சமூக வலைதள முகவர்கள்,   
மற்றும் ஜமாஅத்தார்கள் அனைவர்களுக்கும் 
மயிலாடுத்துரை வட்டார ஜமாஅத் கூட்டமைப்பின் 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

நமது பகுதியில் நடைபெறும் பல்வேறுபட்ட அறியாமை சூழல்கள்,ஏழ்மை,வறுமை,சகோதர சண்டைகள் 
அதன் மூலம் வழக்குகள் இழப்புகள், சமுதாய சீரழிவுகள்,
சீர்கேடுகள் போன்ற உள்ளத்தை ரணப்படுத்தும் பல்வேறுபட்ட நிகழ்வுகளால் வேதனைக்குள்ளாகி,அனைத்திலும் 
சிக்கி சீரழியும் நம் மக்களை சீர்தூக்கவேண்டும் எனும் 
சீரிய சிந்தனையின் வழியே உருவாக்கப்பட்டது தான் 
நமது "மயிலாடுதறை வட்டார ஜமாஅத் கூட்டமைப்பு"

பல்வேறுபட்ட கட்சிகள்,இயக்கங்கள் இருக்க,
இது ஒன்று தேவையா எனும் ஐயத்திற்கு இடம் இல்லை.
ஏனெனில் நாம் இயக்கமோ,கட்சியோ ஏற்படுத்தவில்லை.
மாறாக நம்மிடையே நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கக்கூடிய ஜமாஅத் எனும் ஊர் நிர்வாகத்தை சக்திபடுத்தி,
அதன் மூலம் நமது ஊர்களில் வாழும் 
நம் சமூக மக்களின் மேற்குறிப்பிட்ட சீரழிவு 
விஷயங்களில் இருந்து சீர்தூக்கவேண்டும் 
என்பதே நமது நோக்கம்.

அந்த வரிசையில் நாம் எடுத்திருக்கும் விஷயம் 
முதலில் மூன்று. ஒன்று மக்தப் (மார்க்க)பாடத்திட்டம்,
இரண்டு பைத்துல்மால்,  மூன்று நம் நாட்டின் 
நீதிமன்றங்கள் விரும்பும் சமரச தீர்வு மையங்கள்.

மேற்குறிப்பிட்ட விஷயங்களில் நாம் கடந்த மூன்று வருடங்களாக அனைத்து ஊர்களிலும் செயல்பட்டு பல்வேறு பட்ட நல்ல நிகழ்வுகளை எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணையோடு நடாத்தி இருக்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்

அந்த வரிசையில் நாம் நமது பகுதியின் பாரம்பரியமான 
ஊர்களில் ஒன்றான நீடூர் நெய்வாசல் ஜமாஅத்தில் நடைபெறும் விரும்பத்தகாதவைகளால் கவலைகொண்டு நமது 
வட்டார ஜமாஅத்தின் நிர்வாக குழுவில் விவாதித்து 
நீடூர் நெய்வாசல் ஜமாஅத்தின் இருதரப்பிற்கும் சமரசம் 
செய்து வைப்போம் எனும் நோக்கில் சென்று,


நீடூர் நெய்வாசல் ஜமாஅத்தினர் குறிப்பிடும் 
இரு தரப்பினரையும் பலமுறை சந்தித்து சுமூக சூழ்நிலைகள் ஏற்படுவதற்கான இரு தரப்பு நிபந்தனைகளை முழுவதையும் கேட்டு,


அவைகளை எப்படி செயல்படுத்துவது என நீடூர் நெய்வாசலில் 
உள்ள மூத்த ஜமாஅத்தினர்களை சந்தித்து அவர்களை 
ஜின்னாதெரு பள்ளியில் ஆலோசனைக்கு அழைத்து


அந்த ஆலோசனைக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளராக 
ஜின்னாதெரு அப்துல் ஹக்கீம் அவர்களையும்
ஹபீப் அண்ட் கோ முஸாஹுதீன் அவர்களையும் 
எல்லோருடைய விருப்பத்தின் அடிப்படையில் தேர்தெடுத்து,


அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட விஷயமான இருதரப்பையும் மீண்டும் சந்திப்பது எனும் முடிவின் பிரகாரமே 
நமது வட்டார ஜமாஅத்தின் அங்கத்தினர்கள் 
தற்போதைய நிர்வாகத்தின் தரப்பை முதலில் சந்தித்து 
அவர்களிடம் இருந்து நாம் எடுக்கும் முயற்சிக்கு 
ஒத்துழைப்பதாக கடிதம் பெற்றோம்.


பிறகு மற்றொரு தரப்பினர்களை சந்திக்கவேண்டி 
அவர்களின் பிரதிநிதியை சந்தித்தோம்.

எந்த விஷயத்தை தற்போதைய நிர்வாக தரப்பினரிடம் எடுத்துரைத்தோமோ, அதையே தான் ஜின்னதெரு பள்ளிவாசலில் நடைபெற்ற ஆலோசனை கூடத்திலும் எடுத்துரைத்தோம், 
அதையே தான் மற்றொரு தரப்பிடமும் எடுத்துரைத்தோம்.

இதில் விருப்பதகாதவைகளாக எதையும் நாம் கூறவில்லை 
என்பதை இதன் மூலம் கூறிக்கொள்கிறோம்.

நமது மயிலாடுத்துரை வட்டார ஜமாஅத் கூட்டமைப்பு நோக்கமே ஒருங்கிணைப்பது,ஒன்றுபடுவது அதன் மூலம் அனைத்திலும் சிக்கி சீரழியும் நம் மக்களை சீர்தூக்கவேண்டும் என்பதுதானே தவிர யாரையும் புன்படுத்தவோ, வருத்தமடையசெய்வதோ அல்லது ஒரு சார்பு நிலை எடுப்பதோ அல்ல என்பதை இந்த விளக்க கடிதத்தின் மூலம் அறியப்படுத்துகிறோம்.

நல்ல சுமூக நிலை ஏற்பட அனைத்தையும் கடந்து வல்லோன் அல்லாஹ்வுக்காக தொடர்ந்து சமாதான முயற்சி செய்து வருகிறோம்.

இறைவனின் வார்த்தைகளை நினைவுகூறுவோம் :-

3:103   وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَاءً فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنتُمْ عَلَىٰ شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

24:55   وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا ۚ وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும்இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.

சமூகப்பணியில் என்றும்
நிர்வாக குழு
மயிலாடுதுறை வட்டார ஜமாஅத் கூட்டமைப்பு

Date :  21 -05 – 2012.
Place: மயிலாடுதுறை

தகவல் உதவி :-
மக்கள் தொடர்பாளர்,     
மயிலாடுதுறை வட்டார ஜமாஅத் கூட்டமைப்பு  
கைப்பேசி : 09443456378

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,
    உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.உங்களின் தளம் சிறக்க வாழ்த்துக்கள்.மேலும் மேலும் புதிய தகவல்களை உங்களிடம் இருந்து எதிர் பார்கின்றேன்..உங்கள் பணி சிறக்க உங்கள் தளத்தில் என்னை இணைத்துக்கொண்டேன்...

    **கருத்துரை தருவோர் வசதிக்காக WORD VERIFICATION நீக்கவும்.

    எனது தள புதிய வரவுகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா?14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி, ஆக்கபூர்வமான இன்னும் பலகட்டுரைகள்.

    அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....www.tvpmuslim.blogspot.com

    ReplyDelete